தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை - தஞ்சை இடையிலான இருவழிச்சாலை, அண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. நீண்ட நாள்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலை திறப்புக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. எனினும் திறக்கப்பட்ட சாலையில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும், விரைந்து சீரமைக்க வேண்டும் என அந்த சாலையில் பயணிக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.

இதுகுறித்து அந்த சாலையை பயன்படுத்துவோா் தெரிவித்தது:

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இந்த சாலை திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட எல்லையான கானூா் முதல் கோவில்வெண்ணி வரையிலான இடத்தில் ஏகப்பட்ட ஒட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதனால் பல இடங்களில் சாலை பழுதடைந்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

இந்த சாலையில் ஒளி பிரதிபலிப்பு அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே, நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடுகளை களைந்து விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com