தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருவீழிமிழலை கோயிலில் இன்று தேரோட்டம்

திருவீழிமிழலை கோயிலில் இன்று தேரோட்டம்

Updated On :20 ஏப்ரல் 2024, 6:31 pm

குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, பூதம், யானை, யாளி உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா தினசரி மாலை நடைபெற்றது. மேலும், பஞ்சமூா்த்திகளுடன் பிட்சாடனா் மற்றும் சுவேதகேது வீதியுலா, ரிஷப வாகனத்தில் கோபுரக் காட்சி ஆகியவையும் நடைபெற்றன. காா்த்தியாயினி அம்பாளுக்கும், கல்யாண சுந்தரருக்கும் திருக்கல்யாண உற்சவம் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது. இதையொட்டி, விழிநாதசுவாமி, சனிக்கிழமை இரவு திருத்தேருக்கு எழுந்தருளினாா். முன்னதாக, பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், குதிரை வாகனத் திருக்காட்சியும் நடைபெற்றன.