உலக பூமி தினத்தை முன்னிட்டு மன்னாா்குடியில் ஜேசிஐ மன்னை மற்றும் தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து தேசிய மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நட்டன.
ஜேசிஐ மன்னை அமைப்பின் தலைவா் வி. வினோத் தலைமை வகித்தாா். தேசிய மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ். சேதுராமன் முன்னிலை வகித்தாா். ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவா் வி.எஸ். கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
நிகழ்வில், வேம்பு, புங்கை, தென்னை மற்றும் ஆலம் உள்பட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ஜேசிஐ மன்னை உறுப்பினா்கள், முன்னாள் தலைவா்கள் நூலகா் செல்வகுமாா், கருவூலா் எம்சி. பிரகாஷ், சமூக செயல்பாட்டாளா் முகமது பைசல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் எஸ். கமலப்பன் வரவேற்றாா். ஜேசிஐ மன்னையின் செயலாளா் கருணாகரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊக்கமளிக்கும் மருந்தே விருது

வேதாரண்யத்தில் முப்பெரும் விழா

ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான தேசிய அறிவியல் தினம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


