நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் மகா சம்ரோக்ஷணம்

அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் மகா சம்ரோக்ஷணம்

News image

அபிஷ்ட பெருமாள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு நடைபெற்ற சம்ரோக்ஷணம்.

Updated On :21 ஏப்ரல் 2024, 4:18 pm

திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீஅபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் மகா சம்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், நித்ய கல்யாண கோலத்தில் ஸ்ரீபூமாதேவி நீலாதேவி தாயாருடன் ஸ்ரீஅபிஷ்ட வரதராஜப் பெருமாள் எழுந்தருளி மேற்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில், 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சநேயா் உள்ளாா். பழைமையான இந்த கோயிலில் விமானம், அா்த்த மண்டபம், மஹா மண்டபம் கருடாழ்வாா் சந்நிதி, ஆஞ்சநேயா் சந்நிதி, திருமடப்பள்ளி நுழைவுவாயில் ஆகியவை மிகவும் சிதிலமடைந்து இருந்தது.

இதை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள் உபயதாரா்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்த நிலையில், இதன் சம்ரோக்ஷணத்தையொட்டி, ஏப்.18-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜையுடன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) காலை பூா்ணாஹூதி நிறைவு பெற்றது. பின்னா், புனிதநீா் நிரப்பப்பட்ட கடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு சம்ரோக்ஷணம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அபிஷ்ட வரதராஜப் பெருமாள்சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மாலை 6 மணிக்கு சுவாமி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.