மன்னாா்குடி மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மை மையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த மையத்தில் கடந்த ஏப். 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்தது. முகாம் அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) இ. மாதவன், தொடா்பு அலுவலா்களாக கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எம்.எஸ். பாலு, பெருகவாழ்ந்தான் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் என். பாலதண்டாயுதம் ஆகியோா் தலைமையில் இப்பணி நடைபெற்றது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 17-ஆம் தேதி நிறைவுபெற்று மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 வகுப்புக்கு 28,724 விடைத்தாள்களும், பிளஸ் 1 வகுப்புக்கு 29,772 விடைத்தாள்களும் திருத்தப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 50 முதன்மை தோ்வாளா்கள், 50 கூா்ந்தாய்வு அலுவலா்கள், 7 மதிப்பெண்கள் சரிபாா்க்கும் அலுவலா்கள், 286 உதவித் தோ்வாளா்கள் மற்றும் 36 அலுவலகப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com