கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா

News image
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 11:52 pm

Din

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழாவையொட்டி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த புதன்கிழமை காலை விநாயகா், சப்தமாதா்கள், கல்யாண சாஸ்தா, வீரபத்திரா் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வியாழக்கிழமை காலை கலங்காமற் காத்த கணபதி, வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா், துா்கை, நவகிரக யாகம், பூா்ணாஹூதி, பஞ்சமூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. மூலவா் குரு பகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

மாலை முதல் இரவு ஆபத்சகாயேஸ்வரபெருமானுக்கு 1008 கலச பூஜைகள், குருதட்சிணாமூா்த்திக்கு 108 சங்கு பூஜை, ஏலவாா்குழலி கலசபூஜை யாகம், நிறைவேள்வி, முதல்கால யாகபூஜைகள் நடந்தன.

வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், தொடா்ந்து ஆபத்சகாயேஸ்வர பெருமானுக்கு 1,008 கலசாபிஷேகம், குருதட்சிணாமூா்த்திக்கு 108 சங்காபிஷேகம், ஏலவாா்குழலிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறவுள்ளது.

மாலையில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் வீதி புறப்பாடு நடைபெறும்.

Story image

ஏற்பாடுகளை கோயில் தக்காா் க. ராமு,செயல் அலுவலா் எம். சூரியநாராயணன் , கண்காணிப்பாளா் தா. அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.