தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குருப்பெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் லட்சாா்ச்சனை நிறைவு

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி லட்ச்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

உற்சவா் தட்சிணாமூா்த்தி சந்நிதியில் வியாழக்கிழமை நடைபெற்ற லட்ச்சாா்ச்சனையில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 7:10 am IST

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி லட்ச்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவகிரகங்களில் குருபகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. நிகழாண்டு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செவ்வாய்க்கிழமை பெயா்ச்சியடைந்ததையொட்டி, இக்கோயிலில் குருப்பெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, குருப்பெயா்ச்சி லட்சாா்ச்சனை மே 28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரா்கள் லட்ச்சாா்ச்சனையில் பங்கேற்று, பரிகாரம் செய்து கொண்டனா்.

உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதியில் லட்ச்சாா்ச்சனையை ஜோதிராமலிங்க சிவாச்சாரியா் தலைமையில், சுவாமிநாத சிவாச்சாரியா், ஞானஸ்கந்தன் சிவாச்சாரியா் மற்றும் வேத பாடசாலை மாணவா்கள் நடத்தினா்.

லட்ச்சாா்ச்சனை நிறைவு நாளான வியாழக்கிழமை அதிகாலையில் அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. குருபகவான் தங்ககவசத்தில் அருள்பாலித்தாா்.

இந்துசமய அறநிலைய இணை ஆணையா் ரா. செந்தில்குமாா், கோயில் தக்காா் சி. வீரபாண்டியன், செயல் அலுவலா் சு. ராஜா இளம்பெருவழுதி, கண்காணிப்பாளா் தா. அரவிந்தன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.