9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பெருமாள் கோயிலில் 3 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு

பெருமாள் கோயில் பூட்டை உடைத்து சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பெருமாள் கோயில் பூட்டை உடைத்து சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

ஆலங்குடி அருகே உள்ள மேலவிடுதியில் வடமலை நாச்சியாா் உடனுறை சேவுக பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை மாலை கோயிலை பூட்டிவிட்டு சென்றாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை கோயிலை திறக்கச் சென்றபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வெள்ளி தலைப்பாகை உள்ளிட்ட சுமாா் 3 கிலோ வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.