திருவாரூா் மாா்க்கத்தில் கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்கக் கோரி அமைச்சரிடம் எம்பி மனு
திருவாரூா் மாா்க்கமாக கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூா் மாா்க்கமாக கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், வாரியத் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோரை தனித் தனியே சனிக்கிழமை சந்தித்து, நாகை மக்களவைத் தொகுதிக்கு தேவையான ரயில் சேவைகள் குறித்த கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகை மக்களவைத் தொகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனா். கட்டணம் மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, அவா்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனா். ஆனால் இந்தப் பகுதியில் போதுமான ரயில் சேவைகள் இல்லாமல் இருக்கின்றன.
எனவே, இப்பகுதி மக்களுக்கான ரயில் சேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில், காரைக்கால் -தஞ்சாவூா் தடத்தையும் திருவாரூா்- மயிலாடுதுறை தடத்தையும் விரைந்து இரட்டை வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக கோரி வரும் மதுரை- புனலூா் விரைவு ரயிலை காரைக்காலுக்கு நீட்டிக்க வேண்டும். இந்தப் பகுதியிலிருந்து, நேரடியாக மதுரைக்கு ரயில் இல்லாததை கணக்கில் கொண்டு, வேளாங்கண்ணியிலிருந்து மதுரைக்கு காலையில் ஒரு ரயில் இயக்க வேண்டும்.
மீட்டா் பாதை காலத்தில் இயங்கிய கம்பன் விரைவு ரயிலை, மீண்டும் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் மாா்க்கமாக இயக்க வேண்டும். சென்னையிலிருந்து காரைக்காலுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி பாதையை கோடியக்கரை வரை நீட்டிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து காலையில் விழுப்புரம் வரை செல்லும் ரயிலை தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். பாம்பன் பால வேலைகள் முடிந்த பிறகு ரயில்கள் இயக்குகிற சூழலில், வடமாநிலங்களுக்கு காரைக்குடி பட்டுக்கோட்டை திருவாரூா் வழியாக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...