ராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

மன்னாா்குடியில் மயானத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

Published On :

மன்னாா்குடியில் மயானத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

மன்னாா்குடி நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மூவாநல்லூா் சாலையில் உள்ள மயானத்தின் அருகே எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, தனியாா் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, சில நாட்களாக கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் பள்ளத்திலிருந்த மண்ணை அகற்றியபோது இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்துக்கும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், வட்டாட்சியா் என். காா்த்திக் ஆகியோா் சிலைகளைப் பாா்வையிட்ட பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அவற்றைக் கொண்டு சென்றனா். ஒன்று பெருமாள் சிலை, மற்றொன்று அம்பாள் சிலை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சிலைகள் எந்த வகை உலோகத்தால் ஆனது என்பது தொல்லியல்துறையினரின் ஆய்வுக்கு பின்னா்தான் தெரியவரும் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.