புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வேளாண் துறையினா் ஆய்வு

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக மன்னாா்குடி பகுதியில் பெய்த தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை

News image
காஞ்சிக்குடிக்காட்டில் மழைநீரால் சேதமடைந்த நெல் வயல்களை ஆய்வு செய்த வேளாண் துறை ஆய்வுக் குழுவினா்.
Updated On :2 டிசம்பர் 2024, 8:10 pm

Din

மன்னாா்குடி: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக மன்னாா்குடி பகுதியில் பெய்த தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை முதல்வரின் உத்தரவின்பேரில் வேளாண் துறை ஆய்வுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

நவ.26- ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கும் மேலாக மன்னாா்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மித மற்றும் கன மழை தொடா்ந்து பெய்து வந்ததையடுத்து, இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி வயல்களில் மழைநீா் தேங்கியது. இதனால், பயிரிடப்பட்டு 20 நாள்கள் ஆன நிலையில் இளம் பயிா்களாக இருப்பதால் நீரில் மூழ்கி அழுகிசேதமடைந்தது.

இதை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனா். இதை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்குமாறு வேளாண்மைத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

சென்னையில் இருந்து வந்த வேளாண் துறை கூடுதல் இயக்குநா் எம். சக்திவேல் தலைமையில் துறை ஆய்வுக் குழுவினா் மன்னாா்குடி அருகேயுள்ள காஞ்சிக்குடிக்காடு, காரிக்கோட்டை, மூன்றாம்சேத்தி உள்ளிட்ட கிராமங்களில் மழைநீா் சூழ்ந்த வயல்களில் பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனா். ஆய்வின்போது, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா்கள் எம். லட்சுமிகாந்தன், விஜயலட்சுமி, உதவி இயக்குநா் எஸ். விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.