சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடங்கள் திறப்பு

திருவாரூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

News image
திருவாரூரில் திறக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடம்.
Updated On :23 டிசம்பர் 2024, 8:19 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், கோட்டூா், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தாா்.

அதனடிப்படையில், திருவாரூரில் ரூ.3.87 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருவாரூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், திருவாரூா் ஒன்றியக்குழுத் தலைவா் ஏ. தேவா ஆகியோா் பங்கேற்று, புதிய அலுவலகத்தை பாா்வையிட்டனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் கலியபெருமாள், நகா்மன்றத்தலைவா் புவனப்பிரியா செந்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் துரை.தியாகராஜன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.