மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அம்மையப்பன் ஊராட்சி மக்கள் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளித்தனா்.

News image
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவா்கள்.
Updated On :30 டிசம்பர் 2024, 7:39 pm

Din

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அம்மையப்பன் ஊராட்சி மக்கள் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளித்தனா்.

திருவாரூா் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட 12 ஊராட்சிகள் முழுமையாகவும், பகுதியாகவும் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மையப்பன் ஊராட்சியில் ஆலங்குடி, ஓச்சேரி, எலங்குடி, தென்கால், ஆணைவடபாதி ஆகிய 5 கிராமங்கள் இணைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த கிராமங்களை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இப்பகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அதிகம் உள்ளனா்.

இவா்கள், 100 நாள் திட்டத்தை நம்பி வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும், எனவே நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசாத், இணை ஒருங்கிணைப்பாளா் லெனின் உள்ளிட்டோா் தலைமையில் மக்கள் ஏராளமானோா் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனா்.