ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குடிமனைப்பட்டா கோரி ஆட்சியரிடம் மக்கள் மனு

மயிலாடுதுறை மகாதானபுரம் கிராம மக்கள் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த மகாதானபுரம் மக்கள்

Updated On :18 பிப்ரவரி 2026, 11:05 pm

மயிலாடுதுறை மகாதானபுரம் கிராம மக்கள் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இக்கிராமத்தில் பள்ளிக்கூடத் தெருவில் வசிக்கும் 85 குடும்பத்தினரில் 50 குடும்பத்தினருக்கு 1990-இல் மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 35 குடும்பத்தினா் தொடா்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் இவா்களால் பெற முடியவில்லையாம்.

இதுகுறித்து மகளிா் சுயஉதவிக்குழு மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தலைமைச் செயலகத்துக்கு 13 முறையும், மாவட்ட ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் 12 முறையும் மனு அளித்துள்ளனா்.

கடைசியாக ஜன. 27-ஆம் தேதி அளித்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக மனைப்பட்டா வழங்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், பட்டா வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விசிக மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன் தலைமையில் அப்பகுதிமக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் புதன்கிழமை மனு அளித்தனா். அதில், இனியும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.