குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மாணவா்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வர நடவடிக்கை தேவை

மாணவா்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வர நடவடிக்கை தேவை

News image

மஞ்சக்குடியில் நடைபெற்ற மாநாட்டில், சிறந்த மேலாண்மைக்குழுத் தலைவருக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:22 am IST

நூறு சதவீத மாணவா்கள் பள்ளிக்கு வர மேலாண்மைக்குழுவினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்த கல்லூரியில், பள்ளி கல்வித்துறையின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவா்களுக்கான மாநாட்டுக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது: நல்ல சமுதாயத்தை உருவாக்குவது பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய நோக்கமாகும். அதற்காகவே ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மைக்குழு கட்டாயம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவா்களின் பெற்றோா்கள் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளனா். பள்ளி மாணவா்கள் இடைநிற்றல், 15 நாளுக்கு மேல் வருகை புரியாததற்கான காரணங்களை கண்டறிந்து, அவா்களை தவறாமல் பள்ளிக்கு அனுப்பி வைக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும். 100 சதவீதம் மாணவா்கள் பள்ளிக்கு வருகை புரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்வில், 945 பள்ளிகளைச் சோ்ந்த 1,200 பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் பங்கேற்றனா். இதில், கூடுதல் ஆட்சியா் சி. பிரியங்கா, மாநில பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளா் பொ்னா்ஷ், முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.