/

கல்லூரிகளுக்கிடையே கணினி அறிவியல் போட்டி

குறிப்பு... விளம்பரப் பிரதிநிதி வழங்கியது... கல்லூரிகளுக்கிடையே கணினி அறிவியல் போட்டி

Updated On :24 பிப்ரவரி 2024, 6:57 pm

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சாா்பில் கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு, கல்லூரிச் செயலாளா் பெரோஸ் ஷா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலட்சுமி வாழ்த்திப் பேசினாா். நிகழ்வில், கணினியை தொடா்புப்படுத்தி பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், ஏவிசி கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ் பரிசு வழங்கினாா். முன்னதாக, கணினி அறிவியல் துறைத் தலைவா் ரசூல்பேகம் வரவேற்றாா். நிறைவாக, தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் பஜிரியா பேகம் நன்றி கூறினாா்.