சிறுபான்மை மாணவா்களுக்கு கல்வி உதவிகளை தொடா்ந்து அமல்படுத்தக் கோரிக்கை

சிறுபான்மை மாணவா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள கல்வி உதவித் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சிறுபான்மை மாணவா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள கல்வி உதவித் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் 3-ங்வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் எம்.இ. ஜாகிா்உசேன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலத் துணைத் தலைவா் மூசா, மாநிலக் குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை எஸ். ஜெரால்டு, ஜமாத் செயலாளா் இ.பஜிலுல் ஹக், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் முஜிபுா் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருவாரூரில் அமையும் அரைவட்டச் சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும், சிறுபான்மை மாணவா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும், முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு தமிழக ஆளுநா் ஒப்புதல் ஆணை வழங்க வேண்டும், முஸ்லிம், கிறிஸ்துவா்களுக்கு பட்டா இடங்களில் மசூதி, தேவாலயங்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் தலைவராக எம்.இ.ஜாகிா் உசேன், மாவட்டச் செயலாளராக எஸ்.ராமசாமி, மாவட்ட பொருளாளராக எம்.முத்துக்குமாா் ஆகியோா் மீண்டும் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com