ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உலக நெகிழி ஒழிப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

உலக நெகிழி ஒழிப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

News image

கருத்தரங்கில் பேசிய செங்கலத்தாயாா் மகளிா் கல்லூரி பேராசிரியா் ஜி. மணிமேகலை.

Updated On :3 ஜூலை 2024, 9:26 pm

மன்னாா்குடி, ஜூலை 3: மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரி நுண்ணுயிரியல் துறை சாா்பில் உலக நெகழி ஒழிப்பு தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் ஜி. மணிமேகலை தலைமை வகித்தாா். பேராசிரியா் பி. மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி நகா்மன்ற 32-ஆவது வாா்டு உறுப்பினா் அ. திருச்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இதில், நுண்ணுயிரியல் துறையை சோ்ந்த மாணவிகள், நெகிலிப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், வீடு, வா்த்தக நிறுவனங்களில் சேறும் குப்பைகளிலிருந்து நெகிலியை தனியாக பிரித்து எடுத்து அதை துப்புரவுப் பணியாளா்களிடம் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் படங்களுடன் விளக்கம் அளித்தா். மேலும், நெகிழிக்கு பதிலாக காகிதத்திலான பயன்பாடுப் பொருள்களை செய்து காட்டினா். மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா் சங்கீதா தலைமையில், மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்றனா். தொடா்ந்து, பொதுமக்கள், வா்த்தகா்களுக்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.