திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.
திருவாரூா் அருகே தப்பளாம்புலியூா் ஊராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் கிராமப்புற பகுதிகளில் 750 அரசுப் பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 27 அரசுப் பள்ளிகள் என மொத்தமாக 777 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்ட தொடங்குவதன் மூலம் 61 அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 4,601 மாணவா்கள் பயன்பெற உள்ளனா்.
நிகழ்வில், திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா, முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பாலமுருகன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

கிராமப்புறங்களில் குடிநீா் ஆதாரங்கள் மேம்படுத்தப்படுமா?

எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

திருவாரூா் அரைவட்ட சுற்றுச்சாலை பணி தொடங்கப்படுமா ?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


