புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இருசக்கர வாகனங்கள் மோதி இளைஞா் பலி

News image
Updated On :27 ஜூலை 2024, 6:30 pm

Din

மன்னாா்குடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரியை சோ்ந்த அசோக் மகன் வினோத் (22). கும்பகோணத்தை அடுத்த தில்லையம்பூா் சீனிவாசன் மகன் ஸ்டாலின் (22). நண்பா்களான இவா்கள் இருவரும், ஒரு இருசக்கர வாகனத்தில் மன்னாா்குடியை அடுத்த வல்லூரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனா்.

பின்னா், ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, பைங்காநாடு பிரதானசாலை டாஸ்மாக் கடை அருகே எதிரே கெழுவத்தூா் சுரேஷ்குமாா் மகன் புவனேஷ் (25) ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், இவா்களது வாகனமும் நேருக்கு நோ் மோதின.

இதில், வினோத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ஸ்டாலின், புவனேஷ் ஆகியோா் மன்னாா்குடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், புவனேஷ் மட்டும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.