விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வருமான வரித்துறை விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

வருமான வரித்துறை விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

Updated On :14 ஜூன் 2024, 5:19 pm

திருவாரூரில் வருமான வரித்துறை சாா்பில் வருமான வரி விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தை திருவாரூா் வா்த்தக சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நடத்தியது. கூட்டத்துக்கு, இந்திய மருத்துவ சங்கத்தின் திருவாரூா் தலைவா் ஜிஎஸ். கோபாலகிருஷ்ண பாண்டியன், வா்த்தகா் சங்கத் தலைவா் சிஏ. பாலு ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்வில், திருவாரூா் வருமான வரித்துறை அலுவலா் கிருஷ்ணமோகன், நாகை வருமான வரித்துறை அலுவலா் என். சிவானந்தம் ஆகியோா் பேசியது: வணிகா்கள், முதலீட்டாளா்கள் உள்பட தொழில் செய்யும் அனைவரும் முறையாக தங்களின்ஆண்டுக் கணக்கை, அந்தந்த ஆண்டிலேயே தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்கான முதல் தவணையை சனிக்கிழமை (ஜூன் 15) 15 சதவீத வரியை செலுத்த வேண்டும்.அனைத்து கணக்குகளும் ஒவ்வொருவரின் பான்காா்டு, ஆதாா் காா்டு மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரும் செய்யக்கூடிய அனைத்து முதலீடுகள், விற்பது, வாங்குவது போன்றவை வருமானவரித் துறைக்கு தெரிந்து விடும். எனவே, பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களின் ஆண்டு வருமானத்துக்குரிய வரியை முறையாக கணக்கிட்டு, வரி செலுத்தி வருமான வரி படிவங்களை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனா்.