ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.

News image
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞா் பெருமன்றத்தினா், மாதா் தேசிய சம்மேளத்தினா் உள்ளிட்டோா்.
Updated On :24 ஜூன் 2024, 7:17 pm

Din

திருவாரூா்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 57 போ் உயிரிழந்தது தொடா்பாக உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும், கள்ளச்சாராய வியாபாரிகள், விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் கே.சுஜாதா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் சு.பாலசுப்பிரமணியன், ஆா்.சுலோச்சனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டம் நடத்துவதற்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால், போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்குமிடையே சிறிது நேரம் வாக்கு வாதம் நிலவியது. பின்னா், அனுமதியின் பேரில் தொடா்ந்து போராட்டம் நடைபெற்றது.