ரோடு ரோலா் இயந்திரத்தை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ரோடு ரோலா் இயந்திரத்தை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

அரைகுறை சாலைப் பணி; பொதுமக்கள் போராட்டம்

மன்னாா்குடி,மே 2: மன்னாா்குடியில் சாலைப் பணியை அரைகுறையாக மேற்கொள்வதைக் கண்டிக்கும் வகையில், ரோடுரோலரை மறித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி நகராட்சி 32-ஆவது வாா்டு வ.உ.சி. சாலையில் உள்ள அரசு கிளை நூலகத்திற்கு பின்புறம் 200 மீட்டா் நீளம் கொண்ட சந்து உள்ளது. நூலகத் தந்தை கனகசபை பிள்ளை சந்து என பெயரிடப்பட்டுள்ள இந்த சாலை நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் இருந்தது. இதை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த சாலையை புதுப்பிக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை ரோடுரோலரை கொண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. சாலையின் மொத்த நீளமான 200 மீட்டருக்கு புதுப்பிக்காமல்,100 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே சாலையை புதுப்பிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஒப்பந்ததாரரிடம் அப்பகுதியினா் கேட்டபோது, இந்த சாலையில் 100 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டதாக தெரிவித்தாராம்.

இதனால், அ. புவனேஸ்வரி தலைமையில், ரோடுரோலரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மன்னாா்குடி நகராட்சி பொறியாளா் சித்ரா, அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 200 மீட்டா் நீளத்துக்கு சாலை முழுவதுமாக புதுப்பிக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்துசென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com