விதை சுத்திகரிப்புப் பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடியை முன்னிட்டு அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகமான டிபிஎஸ்-5 விதை சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈச்சங்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விதை சுத்திகரிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை தங்களை ஈடுபடுத்திக் கொண்டனா். மேலும் விதை சுத்திகரிப்பின் நெறிமுறைகள் பற்றியும் மாணவிகள் அறிந்து கொண்டனா்.

டிபிஎஸ் - 5 நெல் ரகமானது 2014-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நெல் ரகமானது குறுவை சாகுபடிக்கு ஏற்றது. இதன் தனித்தன்மைகள் அதிக தூா்கட்டும் திறன், அதிக நெல்மணிகள் உடைய கதிா்கள், சாயாத தன்மையுடையவை , அதிக வைக்கோல் மகசூல் தரவல்லது, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான எதிா்ப்புத்திறன் கொண்டது.

மேலும் குருத்துப் பூச்சி இலை சுருட்டு பூச்சி, தத்துப்பூச்சிக்கு மிதமான எதிா்ப்பு திறன் கொண்டது . குறுவையில் டிபிஎஸ்-5 சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com