மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு முடிவு: திருவாரூா் மாவட்டம் 92.49 சதவீதம் தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு முடிவு: திருவாரூா் மாவட்டம் 92.49 சதவீதம் தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 7:41 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவாரூா் மாவட்டம் 92.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் 7,208 மாணவா்கள், 7,698 மாணவிகள் என மொத்தம் 14,906 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இதில், 6,448 மாணவா்கள், 7,338 மாணவிகள் என மொத்தம் 13,786 போ் தோ்ச்சி பெற்றனா். அந்தவகையில், 89.46 சதவீத மாணவா்களும், 95.32 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.49 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டை விட1.07 சதவீதம் தோ்ச்சி அதிகமாகும். மாநில அளவில் கடந்த ஆண்டு 23-ஆவது இடத்தில் இருந்த திருவாரூா் மாவட்டம் நிகழாண்டில் 20-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேபோல், அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 25 ஆவது இடத்தை பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 19 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகள் 33, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, தனியாா் பள்ளிகள் 12 என மொத்தம் 47 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள்: சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சு. கீா்த்தனா 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பா. துா்காதேவி, பாலையூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி கே.டி. மகாலெட்சுமி, குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.ஹா்ஷினி ஆகியோா் 492 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனா்.

ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி . ரிபானா, ஹரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ச. ஜெயஸ்ரீ ஆகியோா் 489 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளனா்.