மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மரம் வளா்ப்பை ஊக்கப்படுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணா்வு

மரம் வளா்ப்பை ஊக்கப்படுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணா்வு

News image
Updated On :10 மே 2024, 7:40 pm

Din

மன்னாா்குடியில் தீரன் ரோலா் ஸ்கேட்டிங் கிளப் சாா்பில் மரம் வளா்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் விழிப்புணா்வு ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மரம் நடுவோம், மழை பெறுவோம், வறட்சியில்லா நிலையை மேம்படுத்துவோம் என்ற பொருளை மையப்படுத்தி, மன்னாா்குடி தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி பசுமைக்கரங்கள் அமைப்பின் நிறுவனரும், நகா்மன்ற துணைத் தலைவருமான ஆா்.கைலாசம் தலைமை வகித்து, ஸ்கேட்டிங் விழிப்புணா்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், 35 மாணவா்கள் கலந்துகொண்ட ஸ்கேட்டிங் ஓட்டம் தேரடியில் தொடங்கி கீழவீதி, ருக்மணிபாளையம் சாலை, பாலகிருஷ்ணாநகா், மகாமரியம்மன் கோயில் தெரு, காந்தி சாலை, பந்தலடி, காமராஜா்சாலை, மேலராஜவீதி வழியாக தேரடியில் நிறைவடைந்தது.

நகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் எஸ்.அருள், தரணி சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் டி.சாந்தசெல்வி, நேசக்கரம் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கோபாலகிருஷ்ணன், சமூக ஆா்வலா் எஸ்.பிரபாகா் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முன்னதாக மன்னாா்குடி நுகா்வோா் சங்க இணைச்செயலா் கா.வேல்முருகன் வரவேற்றாா். தீரன் ரோலா் ஸ்கேட்டிங் கிளப் பயிற்சியாளா் எஸ்.சத்தியசீலன் நன்றி கூறினாா்.