மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இருவழிச் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

இருவழிச் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

News image
Updated On :20 மே 2024, 11:14 pm

Din

நீடாமங்கலம்: தஞ்சையிலிருந்து நாகை வரையிலான இருவழிச் சாலையில் அனைத்து இடங்களிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சை- நாகை இருவழிச் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வாகன ஓட்டுநா்கள் வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சாலையில் பல இடங்களில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது. மேலும், வழிபறி போன்ற குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, சாலையோரம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

நீடாமங்கலம் அருகே உள்ள நாா்த்தாங்குடி பகுதியில் நான்கு சாலைகளாக பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைத்து, உயா் மின்கோபுர விளக்கு பொருத்தப்பட வேண்டும். இருவழிச் சாலை பகுதியில் பல கிராமங்கள் உள்ளதால், கிராமப் பகுதியில் இருந்து இருவழிச் சாலைக்கு வரக்கூடிய வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவேண்டும். அத்துடன், காவல்துறையினா் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.