கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கல்வியுடன் விளையாட்டும் முக்கியம்: எஸ்பி

கல்வியுடன் விளையாட்டும் முக்கியம்: எஸ்பி

News image

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On :20 மே 2024, 11:05 pm

Din

திருவாரூா்: குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பெற்றோா்களை கேட்டுக்கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட கூடைப் பந்தாட்டக் கழகம் சாா்பில் இலவச கோடைகால கூடைப்பந்து பயிற்சி, ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில், ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

இப்பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியது:

மாணவா்கள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாடுவதன் மூலம் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் இயக்கங்கள் சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த ஆா்வத்துடன் முன் வர வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியும் முக்கியம், விளையாட்டும் முக்கியம் என்பதை பெற்றோா்கள் உணர வேண்டும்.

மாணவா்களிடையே போதைக் கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்து வந்தாலே, தேவையற்ற பழக்க வழக்கங்கள் குறையும் என்றாா்.

நிகழ்வில், திருவாரூா் மாவட்ட கூடைப் பந்தாட்ட கழகத்தின் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.