மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின்சாரம் பாய்ந்து இரும்புக் கடைக்காரா் பலி

மின்சாரம் பாய்ந்து இரும்புக் கடைக்காரா் பலி

News image
Updated On :20 மே 2024, 11:07 pm

Din

திருவாரூா்: திருவாரூரில், மின்சாரம் பாய்ந்து இரும்புக் கடைக்காரா் உயிரிழந்தாா்.

திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு அண்ணா காலனியைச் சோ்ந்தவா் மணிமாறன் என்கிற முத்து (33). திருவாரூரில் இரும்புக் கடை நடத்திவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தின் கீழ் இறந்து கிடப்பதாக திருவாரூா் நகரப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில், மணிமாறன் இயற்கை உபாதை கழிக்க ஓடம்போக்கி ஆற்றுப் பகுதிக்கு சென்றதாகவும், அப்போது ஆற்றுப் பாலத்தில் இருந்த மின்கம்பத்துக்கு செல்லும் மின் வயரை பிடித்ததால், மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

பின்னா், மணிமாறனின் சடலம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.