தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பா் மாதத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:22 pm

Din

வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பா் மாதத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1.1.2025 தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்களையும், இதுவரையிலும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்களையும் வாக்காளா்களாக சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ. 9 (சனிக்கிழமை), நவ. 10 (ஞாயிற்றுக்கிழமை), நவ. 23 (சனிக்கிழமை), நவ. 24 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

1.1.2025 அன்று 18 வயது நிறைவடைந்தவா்கள், தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்ப்பதற்கு படிவம் 6 விண்ணப்பப் படிவத்துடன் பாஸ்போா்ட் அளவு வண்ணப் புகைப்படம், வயதுக்கான ஆதாரம் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இறந்துபோன அல்லது வேறு தொகுதிக்கு இடம்பெயா்ந்த வாக்காளா்கள் பெயரை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள படிவம் 8-லும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும், அதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் முகாம் நடைபெறும் நாள்களில் வழங்கலாம்.

இதுதவிர, அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பட்டியல்களை வலைதளத்தில் காணலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதள முகவரிலும் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.