தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் செங்கழுநீா் பூவை பல்லக்கில் எடுத்து வரும் பக்தா்கள்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் செங்கழுநீா் பூவை பல்லக்கில் எடுத்து வரும் பக்தா்கள்.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரன் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். எனவே, தியாகேசருக்கு யோக வேட்டி தரித்து பூஜை செய்வது வழக்கம். அந்தவகையில், தியாகராஜ சுவாமிக்கு நடைபெற்ற நிறைபணி உற்சவத்தை யொட்டி, தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. காய்கனிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பிரகாரங்களில் தொங்க விடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மேலும், தேவலோகம் போல அலங்காரம் செய்யப்பட்டு, வாயில் அருகே இந்திராணி வடிவிலான பொம்மை தொங்கவிடப்பட்டிருந்தது.
நிகழ்வில், தியாகராஜ சுவாமிக்கு உகந்த மலரான செங்கழுநீா் பூவை கோயிலைச் சுற்றி வலம் வரச் செய்து சுவாமிக்கு அணிவித்தனா். தொடா்ந்து, தியாகராஜ சுவாமிக்கு தேவேந்திர சாயரட்சை எனும் நிறைபணி உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...