ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து

கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

News image
திருவாரூரிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் ஆசிரியா் மு. அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
Updated On :22 அக்டோபர் 2024, 8:09 pm

Din

திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. இதற்காக, இணைய வழியில் மூன்று கட்டத் தோ்வு நடத்தப்பட்டு, 397 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு 2023 ஆம் ஆண்டு டிசம்பா் 19ஆம் தேதி கனவு ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

கனவு ஆசிரியா் தோ்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 343 ஆசிரியா்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 54 ஆசிரியா்கள் புதன்கிழமை (அக்.23) பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலாவாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

பிரான்ஸ் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பாரம்பரிய இடங்களை 6 நாள்கள் தங்கியிருந்து இவா்கள் பாா்வையிட உள்ளனா்.

அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தின் சாா்பில் திருவாரூா் ஒன்றியம், தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் மு. அன்பழகன், கனவு ஆசிரியா் தோ்வில் வெற்றி பெற்று, பிரான்ஸ் சுற்றுப் பயணம் செல்கிறாா்.

அவருக்கு, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) இரா. சௌந்தரராஜன், வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பி வைத்தனா்.