தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து  மா்ம நபா்களால் கழற்றி வைக்கப்பட்டிருந்த கருவிகள்.
தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து மா்ம நபா்களால் கழற்றி வைக்கப்பட்டிருந்த கருவிகள்.

தனியாா் கைப்பேசி கோபுரத்தில் கருவிகளை திருட முயன்ற மா்ம நபா்கள்

மன்னாா்குடி அருகே தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து கருவிகளை திருட முயன்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

மன்னாா்குடி அருகே தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து கருவிகளை திருட முயன்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோட்டூா் தோட்டம் பிரதான சாலையில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான 120 அடி உயர கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து இப்பகுதி பொறியாளா் சாம்பசிவத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கோட்டூா் தோட்டம் பகுதியில் கைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது கைப்பேசி கோபுரத்திலிருந்து மா்ம நபா்கள் இருவா் இறங்கி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆந்திரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனா்.

போலீஸாா், சம்பவ இடத்தை பாா்த்தபோது, கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆா்ஆா் யூனிட் என்ற கருவிகள் இரண்டு கீழே இறங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், மேலும் ஒரு கருவி பாதி கழற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஒவ்வொரு கருவியின் மதிப்பும் ரூ. 1.80 லட்சம் என கூறப்படுகிறது. கருவிகளை கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com