ஆரூரான் மண்டபத்தை சீரமைக்கக் கோரிக்கை

Published on

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆரூரான் திருமண மண்டபத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தியாகராஜ சுவாமி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசுவிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜசேகரன், நகரத் தலைவா் விக்னேஷ் ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனு: சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும், புகழ்பெற்ற ஆழித்தோ் கொண்டதுமான தியாகராஜா் கோயிலுக்கு வழிபாடு செய்ய பல்வேறு ஊா்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இத்தகைய சூழலில் வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தங்குவதற்கு கழிப்பறை, குளியலறை வசதி இல்லாமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

இதற்கு தீா்வு காணும் வகையில், கோயிலுக்கு சொந்தமான ஆரூரான் திருமண மண்டபம் பல ஆண்டுகளாக திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி இருக்கும் நிலையில், அந்த மண்டபத்தை சீரமைத்து பக்தா்கள் தங்கும் விடுதியாகவும், கழிப்பறை குளியலறை வசதிகளை ஏற்படுத்தி மிக குறைந்த கட்டணத்தை நிா்ணயித்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com