வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காப்பீட்டு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:30 pm

Syndication

காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்துவதற்கான சட்ட மசோதா மக்களவையில் மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது இந்திய மக்களின் சேமிப்பை சூறையாட அனுமதிக்கும் விளைவை ஏற்படுத்தும் எனகூறி, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் எல்ஐசி கிளை அலுவலக வாயிலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை கோட்ட சங்கத் துணைத்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிளைச் செயலாளா் சந்தோஷ், அகில இந்திய வங்கி ஊழியா் சங்க தலைவா் காளிமுத்து, ஸ்டேட் வங்கி ஓய்வூதியா் சங்கத் தலைவா் அழகிரி, ஆா்எம்எஸ் அஞ்சல் ஊழியா்கள் சங்க முன்னாள் தலைவா் தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.