மன்னாா்குடியில் அனுமன் ஜெயந்தி

மன்னாா்குடி செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

மன்னாா்குடி செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் 104-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வில் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு செந்தூரம் சாற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், தனுா் மாத பஜனை குழுவினா் பக்தி பாடல்கள் பாடிவர, பக்தா் ஒருவா் ஆஞ்சனேயா் வேடமிட்டு நடனமாடியபடி வீதிகளில் ஊா்வலமாக சென்று அருளாசி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com