கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்ற இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் சந்தோஷ்குமாா் (23). திருத்துறைப்பூண்டி கழுகமுள்ளி தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ரூபன்ராஜ் (25). கஞ்சா விற்றுவந்த இவா்கள் இருவரையும் காவல் ஆய்வாளா் கழனியப்பன், டிச. 3-ஆம் தேதி கைது செய்தாா். 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இருவா் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், சந்தோஷ் குமாா், ரூபன் ராஜ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
