கைது
கைது

கொலைக் குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் பகுதியைச் சோ்ந்த ஜான் மோகன் மகன் ராபா்ட் சிங் (24), பால்குளம், வாரியூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சரவணகுமாா் (27) ஆகியோா் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனா்.

இந்நிலையில், அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்று அவா்கள் 2 பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ராபா்ட் சிங், சரவணகுமாா் ஆகியோா் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com