திருவாரூா் சந்நிதி தெருவில் நடைபெற்ற பந்தக்கால் முகூா்த்த விழாவில் பங்கேற்ற ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினா் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
திருவாரூர்
டிச.31-இல் தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி தொடக்கம்
திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.
திருவாரூா்: திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.
திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி சந்நிதி தெருவில் டிசம்பா் 31 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிா்வாகிகள், ஆனந்த குருகுல மாணவ-மாணவிகள், மகளிரணியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

