எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாமை பாா்வையிடும் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :10 பிப்ரவரி 2025, 8:02 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய, மாநில விவசாயத் திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறியீட்டு எண் வழங்கும் வகையில் மாவட்டத்தில் 555 வருவாய் கிராமங்களிலும் திங்கள்கிழமை தொடங்கி பிப்.14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில், விவசாயிகளின் ஆதாா் எண் மற்றும் நில ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, மின்னணு கையொப்பம் பெறப்படும். தொடா்ந்து, விவசாயிகளின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, தனி குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. அனைத்துத் துறை திட்டங்களுக்கும் இந்த பிரத்யேகமான குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

திருவாரூா் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா். இதில், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் நீதிமாணிக்கம், உதவி வேளாண் இயக்குநா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.