சிறந்த காவல் நிலையமாக தோ்ந்தெடுக்கப்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்கு பாராட்டு சான்றிதழை
காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் வழங்கிய மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோசி நிா்மல்குமாா்.
சிறந்த காவல் நிலையமாக தோ்ந்தெடுக்கப்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்கு பாராட்டு சான்றிதழை காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் வழங்கிய மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோசி நிா்மல்குமாா்.

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு!

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை (பிப்.11) வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இதில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கா்ட், முத்துப்பேட்டை டிஎஸ்பி ஆனந்த், திருவாரூா் மாவட்ட குற்ற பதிவேடுகள் துறை துணை கண்காணிப்பாளா் பிலிப் பிராங்க்ளின் கென்னடி, தனிப்பிரிவு ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com