தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய கணித தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகங்களோடு இணைந்து தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. பதிவாளா் இரா.திருமுருகன், தோ்வு கட்டுப்பாட்டாளா் சுலோச்சனா சேகா், நூலகா் பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலையில் துணைவேந்தா் பேராசிரியா் மு. கிருஷ்ணன் கணித தினத்திற்கான பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்கான ஆன்லைன் வினாடி வினாப் போட்டி, கணித செயல் மாதிரிகள் அமைக்கும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
திருவாரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களும், 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்களும் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ஆா் .சௌந்தரராஜன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினாா் (படம்) .
பேராசிரியா்கள் ரூப்குமாா் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். பேராசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா். பேராசிரியா் லோகநாதன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கல்

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு

‘பொருளாதார அளவியல்’ குறித்து தேசிய பயிற்சிப் பட்டறை

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


