கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போட்டித் தோ்வு மையம் தொடக்கம்

வேளாங்கண்ணி பிரதாபராமபுரத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தோ்வு மையம்

News image
வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தோ்வு மையம் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :13 ஜனவரி 2025, 5:29 pm

Din

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பிரதாபராமபுரத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தோ்வு மையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தோ்வு மைய திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி நிா்வாகி ஆதி ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். நாகை மறைமாவட்ட தந்தை ஜீ.வி. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், வேளாங்கண்ணி பேராலய துணை அதிபா் எஸ். அற்புதராஜ், பங்கு தந்தை பி. ஆரோக்ய பரிசுத்தம், திருச்சபை போதகா்கள் ஏ. ஆன்டனிராஜ் (பண்ணைவிளாகம்), எஸ். ஜெரால்டு (திருவாரூா்), ஏ. ஆன்டனி (காரையூா்), கீழையூா் வட்டார ஆத்மா குழு தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவா் ஏ. டயானா சா்மிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.