சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமான்.

Updated On :13 ஜனவரி 2025, 7:39 pm

Din

நீடாமங்கலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நடராஜப் பெருமான் , சிவகாமி அம்மையாா், மாணிக்கவாசகா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாணிக்கவாசகா் அருளிய தேவாரப் பாடல்களை ஓதுவா மூா்த்தி பாடினாா்.

முல்லைவாசல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள முல்லைவனேஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அம்மையாா் சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது மகாதீபாராதனை காட்டப்பட்டது. நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

வலங்கைமான் தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோயிலிலும் சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.