மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே செம்பியன் கூந்தலூா் பகுதியில் உள்ள ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பத்தில் ஊற்றப்படும் புனித நீா்.

Updated On :10 மார்ச் 2025, 8:45 pm

திருவாரூா்: குடவாசல் அருகே செம்பியன் கூந்தலூா் பகுதியில் உள்ள ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஐயனாா், சாட்டைக்கார சுவாமி, ரேணுகா மகா காளியம்மன் சந்நிதிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா் வழிபாடு, கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகளுடன் முதல் கால பூஜை தொடங்கி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி, மகா பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயில் வலம் வந்து, பரிவாரத் தெய்வங்களான சித்தி விநாயகா், ஐயனாா், சாட்டைக்கார சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ரேணுகா காளியம்மன் கோயில் விமான கலசத்துக்கு புனித ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.