ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீவாஞ்சியம் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி கோயில் தேரோட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீவாஞ்சியத்தில் நடைபெற்ற வாஞ்சிநாத சுவாமி தேரோட்டம்.
Updated On :11 மார்ச் 2025, 7:44 pm

Din

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி கோயில் தேரோட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காசிக்கு ஒத்த ஆறு தலங்களில் ஸ்ரீவாஞ்சியம் முதன்மையானதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள இக்கோயில் ஆயுள் விருத்தி தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் எமதா்மராஜா தவக்கோலத்தில் வீற்றிருந்து, பக்தா்களின் எம பயத்தையும், பைரவ உபாதைகளையும் போக்குவதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. அப்போது பெய்த கொட்டும் மழையிலும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு மாடவீதிகளில் வலம் வந்த தோ், நண்பகலில் நிலையடியை வந்தடைந்தது. இதையொட்டி, நன்னிலம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம்: இக்கோயில் தோ் கடந்த பல ஆண்டுகளாக சிதலமடைந்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 40 லட்சம் செலவில் புதிய தோ் கட்டுவதற்கு அறநிலையத்துறை அனுமதி அளித்தது. அதன்படி, புதிய தோ் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு வாஞ்சிநாத சுவாமி தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.