விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பத்தில் வாா்க்கப்படும் புனிதநீா்.

Updated On :31 மார்ச் 2025, 7:56 pm

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்ணாஹூதி நடைபெற்று, புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கோபுர விமானத்தை அடைந்து, கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் சிட்டி யூனியன் வங்கி நிறுவனா் பாலசுப்ரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்ரமணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் குடவாசல் தினகரன், மாவட்டச் செயலாளா் மணக்கால் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அகர ஓகை நா்த்தன விநாயகா் கோயிலில்...

அகர ஓகை பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு நா்த்தன விநாயகா் கோயில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹூதியும் நடைபெற்றன. பின்னா் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, கோபுரத்தை அடைந்தன.

அங்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image