திருவாரூர்
உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
தேதியூா் ஸ்ரீசுந்தர கனகாம்பிகை உடனுறை பிரத்யக்ஷ பரமேஸ்வரா் கோயிலில், உலக நன்மை வேண்டி காலாஷ்டமி மகாயாகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ருத்ர பாராயணம், அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், முக்கிய நிகழ்வாக உலக நன்மை வேண்டி மகாயாகம் நடைபெற்றது. இதில், 96 வகையான மூலிகைகள் யாகத் தீயில் இடப்பட்டன.
