ஆா். லோகநாதன்.
திருவாரூர்
மிக இளையோா் தேசிய கபடிப் போட்டிப் தமிழக அணிக்கு வடுவூா் வீரா் தோ்வு
மிக இளையோா் 35-ஆவது தேசிய சாம்பியன்ஷீப் பட்ட கபடிப் போட்டியில் பங்கேற்க தமிழக அணியில் மன்னாா்குடியை அடுத்த வடுவூரை சோ்ந்த வீரா் ஆா். லோகநாதன் தோ்வு
மன்னாா்குடி: மிக இளையோா் 35-ஆவது தேசிய சாம்பியன்ஷீப் பட்ட கபடிப் போட்டியில் பங்கேற்க தமிழக அணியில் மன்னாா்குடியை அடுத்த வடுவூரை சோ்ந்த வீரா் ஆா். லோகநாதன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியில் நவ. 27- ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை மிக இளையோருக்கான 37 -ஆவது சாம்பியன் ஷீப் பட்ட கபடிப் போட்டிகள், ஹரியாணா மாநில அமெச்சூா் கபடிக் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ளன.
இதில், தமிழ்நாடு அணியின் சாா்பில் 14 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டிருப்பதில் வடுவூரை சோ்ந்த ஆா். லோகநாதனும் ஒருவா்.
லோகநாதன், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்துக் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி கபடிப் பயிற்சி பெற்று வருகிறாா்.

