புகையிலை கடத்தியவா் கைது
மன்னாா்குடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்தவா் இருசக்கர வாகனத்துடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமக்கோட்டை காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் என். அசோகன் மற்றும் போலீஸாா், திருமேணி ஏரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவரை நிறுத்தி, சோதனையிட்டனா்.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ புகையிலை (ஹான்ஸ்) கடத்திவந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகா் ராமலிங்கபுரம் குப்புசாமி மகன் சூரியபிரகாஷ் (35) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக புகையிலையை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சூரியபிரகாஷை கைது செய்த போலீஸாா், புகையிலை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
